சுவிட்சர்லாந்தை ஐரோப்பாவுடன் இணைக்க பல புதிய பாதைகளை உருவாக்க பெடரல் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதில் 2030 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரக்கூடிய லண்டனுக்கான நேரடி ரயில் பாதையும் அடங்கும்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஜெனீவா மற்றும் சூரிச்சிலிருந்து புதிய நேரடி ரயில்கள் லண்டனில் உள்ள St Pancras ரயில் நிலையத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பயணிகள் இடையே இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பிரெக்ஸிட்டுக்குப் பிறகு நாங்கள் மிகவும் துண்டிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்த வகையான நேரடி இணைப்பு நம்பமுடியாததாக இருக்கும்,” என்று ஒரு பிரிட்டன் கூறுகிறார்.
மூலம்- swissinfo