சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சூரிச்சில் உள்ள Paradeplatz இல் நேற்று 2 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கூடி போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இடதுசாரி தன்னாட்சி பிராந்தியங்களை சேர்ந்த குழுக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் அனுமதி பெறப்படாத போதும், சூரிச் நகர பொலிசார், அதனை தடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பெரியதொரு பொலிஸ் படையை நிறுத்தப்பட்டு பக்கவாட்டு வீதிகள் தடுக்கப்பட்டன.
அதேவேளை போராட்டம் தொடங்கிய போது பொலிசார் பெப்பர் ஸ்பிரே, இறப்பர் குண்டுகள், பொல்லுகளைப் பயன்படுத்தி போராட்டத்தை தடுக்க முயன்றனர் என அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தனர்.
ஈரானில் குர்துகள் மற்றும் பெண்களின் போராட்டம் உட்பட சர்வதேச போராட்டத்தின் மீது அவர்கள் கவனத்தை ஈர்த்தனர்.
இதனால் நகர மையத்தில் ஒன்பது ட்ராம் வண்டிகள் பிற்பகலில் தடைப்பட்டன.
பொது போக்குவரத்து பரவலாக திருப்பி விடப்பட்டது.
மூலம்- swissinfo