அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரண்டு நாய்களைத் திருடிய குற்றவாளிகள், சுவிஸ் பிரஜை ஒருவரை ஒரு மில்லியன் பிராங் கப்பம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர்கள் இருவரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Schlieren இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து Bolonka நாய்கள் கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி திருடப்பட்டன.
அவற்றின் உரிமையாளரிடம் நாய்க் கடத்தல்காரர்கள், ஒரு மில்லியன் பிராங் கப்பம் தருமாறு கேட்டுள்ளனர்.
இதுபற்றி விசாரித்த சூரிச் காவல்துறையினர் இரண்டு நாய் கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சூரிச் விமான நிலையத்தில் 30 வயதான நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிப்ரவரி 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
போலந்தில் நாய்களை காவல்துறையினர் மீட்டனர். 38 வயதான போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் அங்கு வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் காவலில் உள்ளார், போலந்து நாட்டைச் சேர்ந்த நபர் போலந்து அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறார்.
59 வயதான உரிமையாளரிடம் வெள்ளிக்கிழமை போலந்தில் நாய்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நாய்கள் சுமார் 25 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய நாய்களாகும்.
மூலம்- bluewin

