பாசல் நகரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணியின் போது பொலிசார் மீது முட்டை வீசப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில், அனுமதி பெறப்படாத ஆர்ப்பாட்டத்திற்காக சுமார் 300 பேர் Barfüsserplatz இல் கூடினார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
இடதுசாரிக் குழுக்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் தொடர்பு முயற்சிகள் தோல்வியடைந்ததால், ஆர்ப்பாட்டம் நகரத் தொடங்கியது.
ஆர்ப்பாட்டம் அமைதியானதாகவும், சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இடம்பெற்றது.
ஆனால், ஆர்ப்பாட்டம் முடிவதற்கு சற்று முன்னர், மாலை 7:15 மணியளவில், பேச்சுவார்த்தைக் குழுவின் கன்டோனல் காவல்துறை அதிகாரிகள் மீது, முட்டைகள் மற்றும் பிற பொருட்கள் வீசப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் பெண் பொலிசார் ஒருவர் சிறிய காயமடைந்தார் என்று கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை பெர்னில் நடந்த மற்றொரு பேரணியில் 500இற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
மூலம்- 20min