ஜெர்மன் வெர்டி தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை ஹம்பர்க் விமான நிலையத்தில் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது.
அறிவிக்கப்பட்டதை விட ஒரு நாள் முன்னதாக இது தொடங்கியதால், நாள் முழுவதும் புறப்பாடுகள் அல்லது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், சுவிஸ் சர்வதேச விமான நிறுவன விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
சூரிச்சிற்குச் சென்று திரும்பும் நான்கு விமானங்களும், ஜெனீவாவிற்குச் சென்று திரும்பும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டதாக, SWISS விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டதால், 1,315 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனால், ஹம்பர்க்கிற்கு அருகிலுள்ள பிரெமன் மற்றும் ஹனோவர் விமான நிலையங்களுக்கு பெரிய விமானத்தைப் பயணத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக SWISS விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹாம்பர்க் விமான நிலையத்தில் வேலைநிறுத்தம் முதலில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரவுப் பணியுடன் தொடங்கி திங்கட்கிழமை தாமதப் பணி முடியும் வரை நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது.