-1.3 C
New York
Wednesday, December 31, 2025

சுவிட்சர்லாந்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா.

சுவிட்சர்லாந்தை “நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்” கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை, பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகத்தின் இயக்குநர் ஹெலீன் பட்லிகர் ஆர்டிடா, உறுதிப்படுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்து பொருட்களில் நேர்மறையான வர்த்தக சமநிலையைக் கொண்டுள்ளது. ஆயினும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

நாங்கள் நியாயமற்றவர்கள் என்று நிச்சயமாகக் குற்றம்சாட்ட முடியாது.

சுவிட்சர்லாந்து ஒருதலைப்பட்சமாக அதன் தொழில்துறை வரிகளை ரத்து செய்துள்ளது. எங்களிடம் மருந்து வரிகள் எதுவும் இல்லை.

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சுவிட்சர்லாந்திற்கு வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யலாம் என்றும் பட்லிகர் ஆர்டிடா கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles