டிசினோ கன்டோனில் 16 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அவர் கடைசியாக செவ்வாய்க்கிழமை லுகானோவில் காணப்பட்டார்.
டிசினோ கன்டோனல் பொலிசாரின் தகவல்படி, 16 வயதுடைய ஷீலா செயென் டிரிடி, மார்ச் 4 ஆம் திகதி இரவு 8 மணி முதல் காணாமல் போயுள்ளார்.
அவர் மெலிந்த உடல்வாகு கொண்டவர், 160 சென்டிமீட்டர் உயரம், ஓவல்/வட்ட முகம், நடுத்தர நீளமான அடர் பழுப்பு நிற சுருள் முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர்.
அவர் இத்தாலியன் மொழி பேசுபவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்-20min