போலியான கொரோனா பரிசோதனைகளின் மூலம் 1.5 மில்லியன் சுவிஸ் பிராங்கை மோசடி மருத்துவர் ஒருவர் பெற்றுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உத்திகளில் கொரோனா பரிசோதனையும் ஒன்றாகும்.
சுவிஸ் அரசு மருத்துவர்கள் மற்றும் சோதனை மையங்களுக்கு ஒரு சோதனைக்கு 36 பிராங்குகள் வழங்கியது.
தனிப்பட்ட சோதனைகளுக்கு பெயர், பிறந்த திகதி, காப்புறுதி எண் மற்றும் சோதனை திகதி மட்டுமே இதற்கு போதுமான தரவுகளாக இருந்தன.
இது பெரும் மோசடிக்கு வழிவகுத்துள்ளது.
Aargauவை சேர்ந்த ஒரு சுவிஸ்-துருக்கிய மருத்துவர், கற்பனையான கொரோனா சோதனைகள் மூலம் சுமார் 1.5 மில்லியன் பிராங்குகளை சம்பாதித்துள்ளார்.
சூரிச் பகுதியில் உள்ள ஒரு டாட்டூ ஸ்டுடியோவின் உரிமையாளரிடமிருந்து நோயாளிகளின் தரவுகளை அவர் பெற்று அவர்களுக்கு சோதனையை நடத்தியதாக கணக்குக் காட்டி அரசாங்கத்திடம் இருந்து பெருமளவு நிதியைப் பெற்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட மருத்துவர் ஏற்கனவே முறைகேடுகள் காரணமாக சூரிச், ஜூக், பெர்ன், ஆர்காவ், துர்காவ் ஆகிய ஐந்து மாகாணங்களில் பயிற்சி உரிமத்தை இழந்துள்ளார்.
அவர் மருத்துவ பயிற்சி இல்லாமல் ஊழியர்களை பணியமர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் இப்போது தனது பெயரை மாற்றிக் கொண்டு டுபாயில் வசிக்கிறார்.
சமூக ஊடகங்களில், தேநீர் சரியாக எப்படி குடிப்பது என்பது குறித்த சுகாதார குறிப்புகளை அவர் வழங்குகிறார்.
பல்வேறு சுவிஸ் மருத்துவமனைகளுடன் இணைந்து செயற்படுவதாக பட்டியலிடுகிறார்.
ஆனால் இந்த மருத்துவமனைகள் குறித்த மருத்துவருடன் கூட்டாண்மை வைத்திருப்பதை மறுக்கின்றன.
மூலம்-20min

