Solothurn கன்டோனல் கவுன்சிலுக்கு நேற்று நடந்த தேர்தல்களில் SVP கட்சி வெற்றி பெற்றுள்ளது. அது நான்கு இடங்களைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் 100 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் 25 இடங்களைக் கொண்டிருக்கிறது.
SP கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
FDP மற்றும் GLP ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களையும், பசுமைக் கட்சி ஒரு இடத்தையும் இழந்துள்ளன.
இந்த தேர்தல் ஒரு வரலாற்று மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
FDP, 125 ஆண்டுகளில் முதல்முறையாக, கன்டோனல் கவுன்சிலில் முதல்நிலையை இழந்துள்ளது.
இரண்டு இடங்களை இழந்ததன் மூலம், FDP இப்போது 20 இடங்களையே கொண்டிருக்கிறது.
21 இடங்களுடன் இருந்த SP கட்சி இம்முறை 1 ஆசனத்தை வென்றதன் மூலம், FDP, கட்சியை கடந்து சென்றது.
இதனால், FDP மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் CVP ஆக போட்டியிட்ட சென்டர் கட்சி, இம்முறையும் 20 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
மூலம்- bluewin