ஜெனிவா விமான நிலையத்தில் ஏற்பட்ட தகவல் தொடர்பு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
நேற்று நண்பகல் தகவல் தொடர்பு வலையமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் அனைத்து கணினிகளும் செயலிழந்தன.
விமான கட்டுப்பாட்டு கோபுரம் இதனால் பாதிக்கப்படவில்லை. என்பதால் விமானங்கள் தரையிறங்குவது புறப்படுவதில் பிரச்சினை இருக்கவில்லை.
ஆனால் பயணிகளை அனுமதிப்பது மற்றும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
பிற்பகல் 2 மணியளவில் கணினிகள் மீண்டும் செயற்படத் தொடங்கியதை அடுத்து விமான நிலையம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக விமான நிலையப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.