Baden மாவட்டத்தில் உள்ள Vogelsang இல் திங்கள்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய சுவிஸ் நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை 51 வயது ஜெர்மன் நபரை பொலிசார் கைது செய்தனர்.
குற்றத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு 11.00 மணியளவில், இந்தக் கொலை தொடர்பாக அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது.
47 வயதான சுவிஸ் நபரின் மரணத்தை பொலிசார் சம்பவ இடத்திலேயே உறுதி செய்தனர்.
இறந்தவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.
51 வயதான ஜெர்மன் நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடந்து வரும் விசாரணையை காரணம் காட்டி, பொலிசார் எந்த கூடுதல் தகவலையும் வழங்கவில்லை.
மூலம்- Bluewin