ஜெனீவாவில் இடம்பெற்ற பார்சல் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பணம் பறிப்பதற்காக பார்சல் குண்டுகளை அவர் தயாரித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்டதை சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம், உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த கோடையில் இருந்து ஜெனீவாவில் மீண்டும் மீண்டும் பார்சல் குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இந்த வெடிப்புகளால் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சுமார் 60 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
மூலம்- bluewin