-1.2 C
New York
Wednesday, December 31, 2025

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது FC பாசல் அணி.

சுவிஸ் கோப்பை பெண்கள் உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான Servette Chênois அணியை FC பாசல் அணி,  வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சிறந்த பெண்கள் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், பாசல் அணி ஜெனீவாவை விட முன்னணியில் உள்ளது.

அவர்கள் புள்ளிகள் அடிப்படையில் சமமாக உள்ளனர்.

Servette Chênois மற்றும் FC பாசல் அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் 120 நிமிடங்களுக்குப் பிறகு இருஅணிகள் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் காணப்பட்டன.

இறுதியில் பெனால்டி சுற்றில் வெற்றி பெற்று,  FC பாசல் அணி  2015 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னரைப் போலவே, FC பாசல்  அணி இறுதிப் போட்டியில் சூரிச் அணியை எதிர்கொள்ளும்.

இந்த இறுதிப் போட்டி  மார்ச் 29 மே திகதி Letzigrund இல் நடைபெறும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles