16.3 C
New York
Friday, September 12, 2025

புகலிட கோரிக்கையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சுவிஸ் செனட் தீர்மானம்.

குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை வெளியேற்றவும் சட்டங்களை கடுமையாக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக சுவிஸ் செனட் வாக்களித்துள்ளது.

பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, செனட்டர்கள் இதுதொடர்பான இரண்டு சட்டமூலங்களுக்கு ஒப்புதல் அளித்தனர்.

புகலிடம் கோருவோர் மற்றும் குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் குற்றவாளிகளாக இருந்தால், அவர்களை முறையாக வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக, 30 பேரும், 10  எதிராக  பேரும் வாக்களித்தனர்.

மேலும், புகலிடம் கோருவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டவுடன் அவர்களின் நடமாட்ட சுதந்திரத்தை முறையாகக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை 28-11 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles