Gossau அருகே ஏ1 நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 கார்கள் விபத்துக்குள்ளாகியதில், ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
22 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற கார் நெடுஞ்சாலையின் மையத் தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, மேலும் இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்தை எதிர்கொண்டன.
இந்தச் சம்பவத்தில் முதலில் விபத்துக்குள்ளான காரில் பயணித்த 21 வயதுடைய பயணி உயிரிழந்தார்.
மூன்று கார்களினதும் சாரதிகள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்- 20min.