Schwyz கன்டோனில் உள்ள Reichenburg,இல், வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
எனினும் தீப்பற்றிய வீடு இனிமேல் வசிக்க முடியாதளவுக்கு சேதம் அடைந்துள்ளது.
தீயணைப்பு நடவடிக்கையில் சுமார் 100 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்களுக்கு அலேட் சுவிஸ் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஜன்னல்கள் கதவுகளை மூடியிருக்குமாறு அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்த எச்சரிக்கை மாலை 7 மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மூலம்- 20min

