Richenthal இல் உள்ள ஒரு கொட்டகையில் சனிக்கிழமை அதிகாலை, ஏற்பட்ட தீவிபத்தில் பல பண்ணை விலங்குகள் உயிரிழந்தன.
நேற்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது கொட்டகையில் சுமார் 35 பண்ணை விலங்குகள், 200 பன்றிகள் மற்றும் பன்றிக்குட்டிகள் இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
குதிரைகள் மற்றும் பிற சிறிய விலங்குகளும் கொட்டகையில் இருந்தன.
கொட்டகையின் உரிமையாளர்களால் பெரும்பாலான பெரிய விலங்குகளைக் காப்பாற்ற முடிந்தது.
தீயணைப்புத் துறையினர் கடைசி நேரத்தில் பசுவையும் பன்றிகளையும் காப்பாற்றினர்.
சில விலங்குகள் தீக்காயங்களுக்கு உள்ளானதுடன். பல விலங்குகள் தீயில் சிக்கி உயிரிழந்தன.
சரியான எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.
சுமார் 40 தாய்பன்றிகளும் கிட்டத்தட்ட 100 பன்றிக்குட்டிகளும் அகற்றப்பட்டதாக தீயணைப்புத் துறை பேச்சாளர் கூறுகிறார்.
மூலம்- 20min

