பெர்ன் நகர மையத்தில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் நடமாடியது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து, வியாழக்கிழமை மாலை பெரியளவிலான பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 6 மணியளவில் அவசர சேவைகள் Kornhausplatzஐ சுற்றி வளைத்தன.
பெரும் எண்ணிக்கையான பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களும் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது.
இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்த கூடுதல் விவரங்கள் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை.
பொலிசார் ஒரு ரோபோ நாயையும் பணியில் அமர்த்தினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கட்டடத்தை பொலிசார் சோதனை செய்த போத, ஆயுதம் ஏந்திய யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.
மூலம்- bluewin