-2.2 C
New York
Wednesday, December 31, 2025

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது.

Fribourg கன்டோனில் உள்ள Châtel-St-Denis இல், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அந்த நபர் வங்கிக்குள் நுழைந்து ஊழியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, திருடப்பட்ட பல ஆயிரம் பிராங்குகளுடன் தப்பிச் சென்றார்.

இந்தக் கொள்ளையின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

57 வயதான அந்த நபர்  வெள்ளிக்கிழமை மாலை, Gruyère மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணை இன்னும் தொடர்கிறது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles