டிரம்ப் நிர்வாகத்துடனான சந்திப்புக்கு சுவிட்சர்லாந்துக்கு அழைப்புக் கிடைத்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகத்தின் தலைவர் ஹெலீன் பட்லிகர் ஆர்டிடா இந்த வாரம் வொஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்வார்.
இந்தப் பயணம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
அதிகாரிகளுக்கு இடையே ஆரம்ப தொடர்பை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருக்கும் என்றும், எந்தப் பேச்சுவார்த்தைகளோ அல்லது ஒப்பந்தங்களோ எதிர்பார்க்கப்படவில்லை என்றும், பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் அதிகாரிகள் விரைவாக வொஷிங்டனில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடிந்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்துடன் சந்திப்பை நடத்த தற்போதைய காத்திருப்பு நேரம் பல வாரங்கள் ஆகும்.
ஹெலீன் பட்லிகர் இந்த வாரத்தின் எந்த நாளில் அமெரிக்காவிற்கு பயணம் செய்வார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் அவர் யாருடன் பேசுவார், பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், சுவிட்சர்லாந்தின் நோக்கம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை தடுப்பதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே சுவிட்சர்லாந்தை “நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்” கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
மூலம் -swissinfo