29.9 C
New York
Monday, July 14, 2025

சுவிட்சர்லாந்து போருக்குத் தயாராக வேண்டும்- அமெரிக்க ஜெனரல்

சுவிட்சர்லாந்து போருக்குத் தயாராக வேண்டும் என, முன்னாள் அமெரிக்க ஜெனரல் பென் ஹொட்ஜஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க துருப்புக்களை விலக்கிக் கொள்ளக் கூடும்.

அவ்வாற விலக்கிக் கொண்டால் ஐரோப்பாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் ஆபத்தை விளைவிக்கும்.

அது ஐரோப்பாவின் மீது படையெடுப்பதற்கு ரஷ்யாவை ஊக்குவிக்கும்.

சுவிட்சர்லாந்து போருக்குத் தயாராக இருக்க வேண்டும். போரைத் தவிர்க்க வேண்டுமானால், போருக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

எனவே, பாரிய வான் பாதுகாப்பை சுவிட்சர்லாந்து உருவாக்க வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் பென் ஹொட்ஜஸ் 2014 தொடக்கம் 2017 வரை ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க துருப்புக்களுக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles