வொஷிங்டன் நோக்கிச் சென்ற சுவிஸ் விமானத்தில் கழிப்பறைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மீண்டும் சூரிச்சிற்கு திரும்பியுள்ளது.
நேற்று மாலை வொஷிங்டன் நோக்கி சென்று கொண்டிருந்த சுவிஸ் விமானம் சுமார் 2 மணிநேரம் பயணம் செய்திருந்த நிலையில் இந்த பிரச்சினை ஏற்பட்டது.
விமானம் அத்திலாந்திக் கடலுக்குள் பறக்கத் தொடங்கியிருந்த நிலையில் இடது பக்கத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளும் பாதிக்கப்பட்டதால், வேறு வழியின்றி விமானத்தை சூரிச்சிற்குத் திருப்ப விமானிகள் தீர்மானித்தனர்.
விமானம் சூரிச்சில் தரையிறங்கிய பின்னர், 220 பயணிகளும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, ஐந்து மணி நேரம் தாமதமாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கான சுவிஸ் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மூலம்- 20min.