உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தொடர்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட வருடாந்த மகிழ்ச்சி அறிக்கையின்படி சுவிட்சர்லாந்து 13வது இடத்தில் உள்ளது.
2012 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் 11 வது இடத்தைப் பிடித்த, அமெரிக்கா இம்முறை 24 வது இடத்திற்கு சரிந்துள்ளது.
நோர்டிக் நாடுகள் அனைத்தும் மகிழ்ச்சியான 10 நாடுகளில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளன.
டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை பின்லாந்திற்கு அடுத்த நிலையில் உள்ளன.
இதற்கிடையில், கோஸ்டாரிகா மற்றும் மெக்சிகோ முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளன. அவை முறையே ஆறாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளன.
பிரான்ஸ் 33வது இடத்தில் உள்ளது, சுவிட்சர்லாந்து (13வது), பெல்ஜியம் (14வது) மற்றும் கனடா (18வது) இடத்தில் உள்ளன.