19.7 C
New York
Wednesday, October 7, 2026

பெர்னில் ஓடும் வாகனத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்.

பெர்னின், லாங்காஸ் மாவட்டத்தில் நேற்று வாகனம் ஒன்றில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

நேற்று இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர்,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

- Advertisement -

சந்தேகத்திற்குரிய குற்றவாளியின் வாகனம் தெரியாத திசையில் தப்பிச் சென்றுள்ளதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வாகனமோ அல்லது குற்றவாளிகளோ இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிசார் மேலும் கூறினர்.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles