உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களின் உரிமையை அமெரிக்காவிடம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் முன்மொழிந்துள்ளார்.
இது மின்நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
நேற்று இரு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் வெள்ளை மாளிகை இதனை அறிவித்தது.
முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது, 30 நாட்களுக்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்று மற்றதன் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என இணக்கம் காணப்பட்டது.
எனினும், அதனை மீறி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.