ஏழு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 50 வயது நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் பல சிறுவர்களை பல ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
அந்தச் சிறுமிகளில் பலரை வைத்து அவர் வீடியோ எடுத்துள்ளார்.
அவர்களில் 6 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட 7 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், செவ்வாய்க்கிழமை Wil நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார்.
அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு 89 ஆயிரம் பிராங் இழப்பீட்டையும், வழக்குச் செலவுகளையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்- 20min.