17.5 C
New York
Wednesday, September 10, 2025

பெர்ன் மற்றும் Burgdorf சிறைச்சாலைகளில் முறைகேடு.

பெர்ன் மற்றும் Burgdorf நகரங்களில் உள்ள பிராந்திய சிறைச்சாலைகளில் முறைகேடுகள் நடப்பதாக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

“Migrant Solidarity Network,” “Medina,” “Augenauf Bern,” “Democratic Jurists Bern,” மற்றும் “humanrights.ch ஆகிய அமைப்புகளே இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

போதுமான வெளிப்புற உடற்பயிற்சி இல்லை, காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இல்லை,  அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளது, மற்றும் போதுமான மருத்துவ பராமரிப்பு இல்லாதது ஆகிய குற்றச்சாட்டுகளும் அதில் அடங்கும்.

இது சிறைக்கைதிகளை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற இரண்டு மரணங்கள் இந்த விவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளன.

சீர்திருத்த சேவைகள் அலுவலகம் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles