புடாபெஸ்டுக்கு சென்ற A220 ரக சுவிஸ் விமானம், தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சூரிச்சில் தரையிறங்கியது.
விமானம் சூரிச்சில் பாதுகாப்பாக தரையிறங்கிய போதும், அது தரிப்புப் பாதைக்குச் செல்ல முடியாமல், விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதைகளில் ஒன்றின் குறுக்கேற நிற்கிறது.
விமானத்தில் இருந்து 117 பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், ஓடுபாதை 14 மூடப்பட்டுள்ளது.
பயணிகள் மாற்று விமானங்களில் செல்ல ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.