Niederhelfenschwil இற்கு அருகேயுள்ள Langwisen இல் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.
நேற்று அதிகாலை 1 மணியளவில் St. Gallen கன்டோனல் பொலிசாருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
- Advertisement -

சம்பவ இடத்திற்கு அவசர கால சேவையினர் விரைந்த போதும், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
கொட்டகையில் இருந்த 300 கோழிகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமின்றி தப்பியுள்ளனர்.
மூலம்- 20min.


