Solothurn இல் இருந்து Biel நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த A5 ரயிலில் பயணித்த பல பயணிகள் விசம் கலந்த அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதன்கிழமை மாலை, ஒரு பெட்டியில் இருந்த பல பயணிகள் விஷம் கலந்ததற்கான அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து Pieterlen ஓய்வுப் பிரதேசத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
உடனடியாக அங்கு அம்புலன்ஸ் வாகனங்கள், கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்ட 18 பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் 29 பயணிகள் அந்த இடத்திலேயே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதி பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்படவில்லை.
பயணிகள் ஒரே நேரத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இறுதியில் இரண்டு நபர்களுக்கு நோரோவைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இரவு 10 மணியளவில், Pieterlen ஓய்வு பகுதியில் இருந்த முடக்கலை பொலிசார் நீக்கினர்.
மூலம்- 20min.