-2.5 C
New York
Wednesday, December 31, 2025

இத்தாலியில் இருந்து வந்த கார்களில் போதைப்பொருட்கள்.

Brig  இல் இரண்டு கார்களை சோதனையிட்ட எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்க அதிகாரிகள் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

ஒரு காரில் இருந்து 740 கிராம் கொகைனும், மற்றொரு காரில் இருந்து, 61 கிலோ khat போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அல்பேனியரின் சூட்கேசில் இருந்து கொகைன் கைப்பற்றப்பட்டது.

இத்தாலியில் இருந்து இஸ்ரேலிய பயணியை ஏற்றிக் கொண்டு பெலாரூஸ் நாட்டவர் ஓட்டி வந்த மற்றொரு காரில் 61 கிலோ khat கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களும் கார்களில் இருந்தவர்களும் Valais  கன்டோனல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles