Bubendorf கைத்தொழில் பிரதேசத்தில் களஞ்சியம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப்பிரதேசத்திற்கு அலேர்ட் சுவிஸ் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தினால், கடுமையான புகையும், சகிக்க முடியாத நாற்றமும் பரவியுள்ளது.
இதனால் வீடுகளின் கதவுகள் யன்னல்களை மூடியிருக்குமாறும், குளிரூட்டிகளை நிறுத்தி வைக்குமாறும் அலேர்ட்சுவிஸ் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மூலம்- bluewin