ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் ஆண்கள் தொடர்பான புகலிடக் கொள்கையை இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) மாற்றுகிறது.
இதன்படி, புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தனிநபர்களான ஆண்களை சில சூழ்நிலைகளில் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தலாம்.
சில சந்தர்ப்பங்களில், அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புவது நியாயமானது என்று SEM வியாழக்கிழமை அறிவித்தது.
தற்போதைய சூழ்நிலை பகுப்பாய்வுகளின் அடிப்படையில் SEM அதன் நாடுகடத்தல் கொள்கையில் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.
இந்த பகுப்பாய்வுகளின்படி, தீவிர இஸ்லாமிய தலிபான்கள் ஆட்சிக்கு வந்த காலத்துடன் ஒப்பிடும்போது, அங்கு இப்போது பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது.
அத்துடன் சமூக-பொருளாதார சூழ்நிலையிலும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தீவிர இஸ்லாமிய தலிபான்களால் ஆளப்படும் ஒரு நாட்டிற்கு நாடுகடத்தப்படுவது பொதுவாக நியாயமற்றது என்று அரச செயலகம் இன்னும் கருதுகிறது.
இருப்பினும், “சாதகமான காரணிகள்” இருந்தால், பாதிக்கப்படாத ஆண்கள் நாடுகடத்துதல் சாத்தியமாகும்.
SEM இன் தகவல் படி, புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர், குடும்பம் இல்லாமல் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார், ஆரோக்கியமாக இருக்கிறார் மற்றும் சட்டப்பூர்வ வயதுடையவர் என்றார் அவர் நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
மூலம்- swissinfo