ஆபிரிக்காவிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கு, சுமார் 1,700 குடியேறிகளைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும், கடத்தல் வலையமைப்பை பிரெஞ்சு புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வலையமைப்பைச் சேர்ந்த 15 பேர் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் இருந்து, கடத்தல்காரர்கள் பெரும்பாலும் சிறிய மலைப்பாதைகள் வழியாக, எல்லைக்கு அப்பால் குடியேறிகளை அழைத்துச் சென்று தெற்கு பிரெஞ்சு நகரங்கள், பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் இறக்கியுள்ளனர்.
கார் மூலம் பரிமாற்றம் செய்ய ஒரு நபருக்கு 150 முதல் 300 யூரோக்கள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
பிரான்சின் தெற்கில் உள்ள பெர்பிக்னனில் உள்ள ஹோட்டல் வியாபாரி ஒருவர் புலம்பெயர்ந்தவர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணை ஜெர்மனியில் தொடங்கியது.
அங்கு 2022 ஜூலையில் சிரியாவிலிருந்து காரில் குடியேறிகளைக் கடத்தியதற்காக, இரண்டு பிரெஞ்சு பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து புலனாய்வாளர்கள் அல்ஜீரியாவிலிருந்து ஸ்பெயினுக்கு வேகப் படகு மூலம் சட்டவிரோத குடியேறிகளை கடத்துவதைத் தடுக்க முடிந்தது.
இந்த வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஒரு நபருக்கு 9,000 யூரோ அறவிடப்பட்டுள்ளது.
மூலம்- Bluewin