லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் சுவிட்சர்லாந்தில் இருந்து அங்கு செல்லும் 24 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நேற்றிரவு ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்விநியோகம் செய்யும் உப மின் நிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று நள்ளிரவில் இருந்து விமான நிலையத்தை மூட முடிவெடுக்கப்பட்டது.
இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதால், அங்கு 1,351 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன.
இந்தியாவில் இருந்து சென்ற பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் விமானம் சூரிச்சில் தரையிறங்கியது.
சுவிசில் இருந்து லண்டனுக்கான 24 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது விமான நிலையத்திற்கு மீளவும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நள்ளிரவு வரை விமான சேவைகள் மீளத் தொடங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.