சுவிஸ் நகரங்கள் பலவற்றில் நேற்று இரவு ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்கப்பட்டன.
இயற்கை பாதுகாப்பு அமைப்பான WWF ஏற்பாடு செய்த “பூமி நேரம்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விளக்குகளை அணைத்து இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்க தனிநபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு, Bern, Lenzburg, Lucerne, Morges, Montreux, Fribourg, Lausanne, Geneva , Chiasso, Mendrisio மற்றும் Locarno நகரங்களில், பூமி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்றன.
மூலம்- bluewin

