Schaffhausen இல் உள்ள Buchthalerstrasse இல் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.
தீயணைப்புத் துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த அனைவரையும் பாதுகாப்புக் கருதி வெளியேற்றி விட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லைட்டரை தவறாக கையாண்டதால் தீப்பற்றி எரிந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூலம்- 20min

