Beznau 2 அணுமின் நிலையம் தானியங்கி முறையில் நேற்று இரவு 10:31 மணியளவில், அவசரகால முறையில் நிறுத்தப்பட்டது.
220-கிலோவோல்ட் மின் கட்டமைப்புடனான இணைப்பு செயலிழந்ததால் இது நிகழ்ந்ததாக இன்று அதிகாலை அதனை நிர்வகிக்கும் Axpo அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த அணுமின் உற்பத்தி நிறுத்தம் காரணமாக, கதிரியக்கமற்ற நீராவி, கூரை வழியாக வெளியேறியது.
அணுமின் ஆலை நடைமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டதாகவும், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான நிலையில் இருந்தது என்றும் Axpo அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு செயலிழப்புக்கான காரணம் தற்போது ஆராயப்படுகிறது. ஆயினும் அலகு 1 தொடர்ந்து வழக்கம் போல் இயங்குகிறது.
இந்த இரண்டு அணுமின்நிலையங்களும், Aargau கன்டோனில் உள்ள Döttingen இல் அமைக்கப்பட்டுள்ளன.
மூலம்- swissinfo