கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் குற்றச்செயல்கள் எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் 563,633 குற்றங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2009 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, இவ்வளவு கடுமையான வன்முறை குற்றங்கள் ஒருபோதும் பதிவு செய்யப்படவில்லை.
திங்களன்று வெளியிடப்பட்ட காவல்துறை குற்றப் புள்ளிவிவரங்களில் இது கூறப்பட்டுள்ளது.
சைபர் குற்றம், வன்முறை குற்றம் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமைகளில் 30 சதவீத அதிகரித்துள்ளது.
வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
வெளிநாட்டினரின் சில குழுக்களின் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
அல்ஜீரியா, மொராக்கோ , ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லது சுவிஸ் குடிமக்களை விட கணிசமாக அதிக குற்றங்களைச் செய்கிறார்கள் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டினர், இருப்பினும் அவர்கள் மக்கள் தொகையில் 25 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
வன்முறை குற்றங்களுக்காக 23,772 ஆண்களும், 5,962 பெண்களும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்
91,929 பேர் சந்தேக நபர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர் அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
அதிக மக்கள் தொகை கொண்ட சூரிச் மாகாணத்தில் அதிகபட்சமாக 110,240 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் அப்பென்செல் இன்னர்ஹோடன் மாகாணத்தில் மிகக் குறைந்தளவாக 525 குற்றங்கள்பதிவாகியுள்ளன. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min

