சூரிச்சில் முதல் முறையாக, பொது இடத்தில் முகத்தை மூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறிய பெண்ணுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
மத காரணங்களுக்காக முகத்தை மூடிய ஒரு பெண்ணுக்கு சூரிச் நகர காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
அந்தப் பெண் 100 பிராங் அபராதத்தை செலுத்த மறுத்துவிட்டார்.
எனவே வழக்கு கன்டோன் கவர்னர் அலுவலகத்திற்குச் செல்லும், அவர் இந்த விடயத்தில் தீர்ப்பளிப்பார்.
இந்த வழக்கைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அந்தப் பெண் பெரும்பாலும் புர்காவை அணிந்திருக்கலாம் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த “புர்கா தடை”யின் கீழ் விதிக்கப்பட்ட முதல் அபராதம் இதுவாகும்.
சட்டத்தை மீறும் எவருக்கும் 1,000 பிராங் வரை அபராதம் விதிக்கப்படும்.
மூலம்- AFP