16.6 C
New York
Wednesday, September 10, 2025

மீண்டும் அதே இடத்தில் பாறைச் சரிவு- ரயில் போக்குவரத்து தடை.

தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Täsch மற்றும் Zermatt  இடையேயான ரயில் பாதையில், இன்று காலை மீண்டும் பாறை சரிவால் போக்குவரத்து தடைபட்டது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை ஏற்கனவே பாறை விழுந்த அதே இடத்தில் இந்த பாறை விழுந்ததாக அவர் கூறினார்.

மாற்று போக்குவரத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று மேட்டர்ஹார்ன் கோட்ஹார்ட் ரயில்வே X தளத்தில் அறிவித்துள்ளது.

குறைந்த திறன் காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்.

முன்னதாக திங்கட்கிழமை காலை ஒரு பாறை சரிவு காரணமாக ரயில் பாதை துண்டிக்கப்பட்டது.

இதில் ஒரு மேட்டர்ஹார்ன் கோட்ஹார்ட் ரயில்வே இன்ஜின் சேதமடைந்தது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles