16.6 C
New York
Wednesday, September 10, 2025

நாளை சூரிய கிரகணம்- வானியலாளர்கள் எச்சரிக்கை.

சுவிட்சர்லாந்தில் நாளை பகுதி சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 11:20 மணியளவில், சந்திரன் சூரியனுக்கு முன்னால் நகரத் தொடங்கும்.

இருப்பினும், அது சூரியனை முழுவதுமாக மறைக்காது.

கிழக்கை விட சுவிட்சர்லாந்தின் மேற்கில் கிரகணம் சற்று முன்னதாகவே தொடங்கும்.

ஜெனீவாவில் காலை 11:14 மணி முதல் சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும்.

அதேவேளையில், Churஇல் காலை 11:22 மணி வரை கிரகணம் தொடங்காது.

பெர்னில், காலை 11:17 மணிக்கும்,, பாசலில் காலை 11:18 மணிக்கும், சூரிச்சில் காலை 11:20 மணிக்கும் சூரியன் மறைக்கப்படத் தொடங்கும்.

மதியம் 12:02 மணி முதல் மதியம் 12:07 மணி வரை அதிகபட்ச இருள் அடையும். சூரியனில் ஆறில் ஒரு பங்கு மறைக்கப்படும்.

பின்னர் சந்திரன் சூரியனின் உச்சியை நோக்கி பின்வாங்கும். நிகழ்வு தொடங்கி சுமார் 90 நிமிடங்களுக்குப் பின்னர் பகுதி கிரகணம் முடிந்துவிடும்.

சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம்  என வானியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் வருடத்திற்கு இரண்டு முதல் ஐந்து கிரகணங்கள் நிகழ்கின்றன, ஆனால் அவை உலகின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே தென்படும்.

சுவிட்சர்லாந்தில்  இனி முழு சூரிய கிரகணம்,  2081  செப்டம்பர் 3, ஆம் திகதியே  நிகழும்.

நாளைய பகுதி சூரிய கிரகணம் 21 ஆம் நூற்றாண்டின் 17 ஆவதும், இந்த ஆண்டின் முதலாவதும் கிரகணமாக இருக்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles