17.2 C
New York
Wednesday, September 10, 2025

மியான்மாரில் நிலநடுக்கத்தினால் பேரழிவு- தாய்லாந்தும் நடுங்கியது.

மியான்மாரின் மண்டலாய் மாகாணத்தில் மையம் கொண்டிருந்த பாரிய நிலநடுக்கத்தினால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 12.50 மணியளவில் றிக்டர் அளவுகோலில், 7.7 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 நிமிடம் கழித்து 6.4 அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்களால் பெருமளவு வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இவற்றில் சிக்கி பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தலைநகர் நேபிடோவிலும், வீதிகள் பிளவுபட்டு காணப்படுகின்றன. மீட்புப் பணிகள் இடம்பெறுகின்றன.

அதேவேளை மண்டலாயில் இருந்து பலநூறு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தாய்லாந்தின் பாங்கொக் நகரிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாங்கொக்கில் கட்டுமானம் இடம்பெற்றுக் கொண்டிருந்த 30 மாடிக் கட்டடம் ஒன்று முற்றாக தகர்ந்து விழுந்துள்ளது.

அங்கு 409 பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் என்றும் அவர்களில் 81 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து மியான்மாரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles