17.2 C
New York
Wednesday, September 10, 2025

சுவிஸ் போர் விமான விபத்து- விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளருக்கு அபராதம்.

சுவிட்சர்லாந்தில் F/A-18 இராணுவ ஜெட் போர் விமான விபத்துக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் கவனக்குறைவே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த விமானியின் கொலைக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை குற்றவாளி என இராணுவ மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2016 ஓகஸ்ட் 29, ஆம் திகதி பெர்ன் மாகாணத்தில் உள்ள மெய்ரிங்கனில் விபத்து இடம்பெற்று எட்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆராவ் நகரில் உள்ள 42 வயதான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட  11,400  பிராங் அபராதம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்கனவே முந்தைய நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

இரண்டாவது போர் ஜெட் விமானியின் விடுதலையை இரண்டாவது இராணுவ மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles