பிரான்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவங்களின் கவச மற்றும் பீரங்கிப் பிரிவுகள் சுவிட்சர்லாந்தில் ஒன்றாகப் பயிற்சி பெறவுள்ளன.
மார்ச் தொடக்கம், நவம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தப் பயிற்சி நடைபெறும்.
சுவிஸ் இராணுவத்தின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
சுவிஸ் ஆயுதப் படைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சுவிஸ் விமானப்படை நேற்று மூன்று நாள் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
உபகரணங்கள் மற்றும் படையினருக்கான விநியோகத்தை பரிசோதிக்க F/A-18 போர் விமானங்கள் பெர்ன்-பெல்ப் விமான நிலையத்தில் தரையிறங்குகின்றன.
சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தளபதி பீட்டர் மெர்ஸ் வலியுறுத்துகிறார்.
உக்ரைன் போருக்குப் பிறகு, சுவிட்சர்லாந்து மீதான தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo