Däniken அருகே காட்டில் வேலை செய்து கொண்டிருந்த 28 வயது ஆண் ஒருவர், மரம் விழுந்து மரணமானார்.
செவ்வாய்கிழமை காலை 11.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Däniken க்கு அருகில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக Solothurn கன்டோனல் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
மரம் விழுந்து படுகாயம் அடைந்தவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மூலம்- bluewin