Winterthur Töss இல் உள்ள பாடசாலை ஒன்றில் மோதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களிடம் இருந்து கத்தி மற்றும் பற்றன் பொல்லு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
19 வயது சிரிய இளைஞனிடம் இருந்து கத்தியும், 18 வயது சுவிஸ் இளைஞனிடம் பற்றன் பொல்லும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிசார் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுடுகலன்கள் சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இரண்டு பேரும் தாங்கள் தம்மிடம் இருந்த ஆயுதங்களை மோதலுக்கு பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் சிறிய காயம் அடைந்துள்ளார்.
மூலம்- 20min