Rapperswil ரயில் நிலையத்திற்கு உள்ள பகுதியில் திங்கட்கிழமை அதிகாலையில் 12 கார்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
Fischmarktplatz, Oberseestrasse, Rietstrasse, Güterstrasse, மற்றும் Tiefenaustrasse பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சிகரெட்டுகள் மற்றும் உடைகள் திருடப்பட்டுள்ளன.
என்ன நோக்கத்திற்காக கார்கள் உடைக்கப்பட்டன என்பது குறித்து St. Gallen கன்டோனல் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்- 20min