23 C
New York
Wednesday, June 17, 2026

நேருக்கு நேர் மோதிய கார்கள் – ஒருவர் பலி.

Worb  இல் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

செவ்வாயன்று, மாலை 4.15 மணியளவில், Worb  இல் உள்ள விஸ்லன் சுரங்கப்பாதையில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஒரு பெண் ஓட்டுநர் Wislen சுரங்கப்பாதையில் எதிரே வந்த கார் மீது மோதியதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, இரண்டு அம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காரில் இருந்த பயணி மூன்றாவது ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே  இறந்தார்.

இறந்தவரின் அடையாளம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

விபத்து மற்றும் மீட்புப் பணியின் விளைவாக, விஸ்லன் சுரங்கப்பாதை பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles