திங்கட்கிழமை பிற்பகலில் காணாமல் போன, 56 வயதான ஆங்கிலேயர் ஒருவர் ஹோட்டல் ஒன்றின் கழிவறையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் காணவில்லை என்று Graubünden கன்டோனல் காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது.
ஒரு இழுவை ட்ரக்கை ஓட்டிக்கொண்டு சென்ற அந்த நபர் அதை Laax Murschetg இல் நிறுத்தியிருந்தார்.
உடனடியாக தொடங்கிய தேடுதல் பணி செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்த நிலையில், அன்று மாலை 6 மணியளவில் ஹோட்டல் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ராணுவ ஹெலிகொப்டர்கள் மற்றும் சூரிச் கன்டோனல் பொலிஸ், அவர்களின் தொழில்நுட்ப திறன்களுடன், பயன்படுத்தப்பட்டன.
பொலிஸ் விமான சேவை மற்றும் ட்ரோன் படை மூலமும் தேடுதல் நடத்தப்பட்டது.
மூலம்- 20min.

